2019 நவம்பர் 10 அன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் போலியான அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள ஆவணத்தை தயாரித்து வெளியிட்டமைக்காக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மீது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது.
அலி சப்ரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் சட்ட ஆலோசகராக நீண்டகாலம் செயல்படுபவர். கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க அனைத்து சட்ட ஆவணங்களையும் இவரே தயாரித்திருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச, போட்டியிட்ட உள்ளதாக தகவல்கள் வெளியான நாள் முதலேயே இவர் அமெரிக்க குடியுரிமை கொண்டவர் என பரவலான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
நம்பகத்தன்மையை சந்தேகிக்றோம்
என்றாலும், கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை துறந்துவிட்டுதான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகிறார் என அப்போது சட்டத்தரணியாக பணியாற்றிய அலி சப்ரி கூறியதுடன், அதற்கான ஆவணங்களை ஊடக சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமெரிக்க குடியுரிமையை கோட்டாபய ராஜபக்ச, துறந்ததாக கூறும் பல ஆவணங்களை அலி சப்ரி முன்வைத்திருந்தார்.
இந்த ஆவணங்களை சமர்ப்பித்த தருணத்தில் பல்வேறு கேள்விகள் எழுந்தன. அதன் நம்பகத்தன்மையை சந்தேகிக்றோம் என “லங்கா ஈ நியூஸ்“ இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க சட்டத்தின்படி, குறிப்பாக ஆவணங்களை பொய்யாக்குவதற்கான சட்டத்தின்படி, அலி சப்ரியின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.
சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்
சட்டம் கூறுவதாவது, “எந்தவொரு பதிவேடு, ஆவணம் அல்லது தெரிந்தே மாற்றுவது, அழிப்பது, சிதைப்பது, மறைத்தல், பொய்மைப்படுத்துதல் அல்லது தவறான பதிவு செய்தல், விசாரணை அல்லது முறையான நிர்வாகத்தை தடுக்கும், அல்லது செல்வாக்கு செலுத்தும் நோக்கத்துடன், செயல்படுவது கடுமையான குற்றம் என்பதுடன், 20 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் என இரண்டும் விதிக்கப்படும்.”
அலி சப்ரி குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது ஒரு பிரமாணப் பத்திரத்தின் நகலையும் சமர்ப்பித்தார். இதனை அமெரிக்க வெளியுறவுத்துறை புனையப்பட்ட ஒரு ஆவணமாக கண்டறிந்துள்ளது. இந்த வாக்குமூலமும் பொய்யானது என நிரூபிக்கப்பட்டால், அலி சப்ரி கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் சட்ட ஆலோசகராக கடமையாற்றிய இலங்கையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் ஒருவர் விசாரணையின் பின்விளைவுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
”அலி சப்ரிக்கு எதிராக அமெரிக்காவினால் சுமத்தப்படும் எந்தவொரு குற்றச்சாட்டும் அவரது தொழில் வாழ்க்கையை சீர்செய்ய முடியாத வகையில் சேதப்படுத்தலாம்.” என அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் தெரியவந்துள்ளது
கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தால் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு போலி ஆவணங்களைக் கொண்டு, அப்போதைய இலங்கை தேர்தல் ஆணையராக இருந்த மஹிந்த தேசப்பிரிய, அலி சப்ரியால் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேசப்பிரியவிற்கு அமெரிக்க தூதரகத்தில் இருந்து வந்ததாக நம்பப்படும் தொலைபேசி அழைப்புகள், உண்மையில் அலி சப்ரியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளுர் இலங்கையர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஏப்ரல் 17, 2019 அன்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் கோட்டாபய ராஜபக்ச செய்ததாகக் கூறப்படும் சத்தியப் பிரமாணத்தின் செல்லுபடியாகும் தன்மையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.
இந்த சத்தியப்பிரமாணத்தின் விவரங்களும் நேரமும் இப்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதியாக உள்ளது
கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை ரத்து 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்ததாக அலி சப்ரி கூறியமை தற்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் பொய் என நிரூபிக்கப்பட்டால், கோட்டாபய ராஜபக்சவின் தகுதியையும் அலி சப்ரியின் நம்பகத்தன்மையையும் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த விசாரணையின் முடிவுகள் அலி சப்ரிக்கு மற்றும் இலங்கையின் கௌரவதற்கும் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த கடுமையான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர அமெரிக்க வெளியுறவுத் துறை உறுதியாக உள்ளது என்று “லங்கா ஈ நியூஸ்“ வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.