மயிலாப்பிட்டியவில் பேருந்து விபத்து: 09 பேர் வைத்தியசாலையில்

ஹங்குரங்கெத்தயிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த பயணித்த பேருந்தொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து மயிலாப்பிட்டிய பகுதியில் இன்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானபேருந்தொன்றே வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட காயமடைந்தவர்கள் கண்டி பொது வைத்தியசாலை மற்றும் ரிக்கிலகஸ்கட வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin