சுகாதார சேவையில் உள்ள 72 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் தேசிய வைத்தியசாலை மற்றும் சுகாதார அமைச்சுக்கு முன்பாக இடம்பெற்றது.
இந்த போராட்டத்தில் தாதியர்கள், வைத்தியர்கள், துணை வைத்தியர்கள், முகாமைத்துவ சேவை கனிஷ்ட ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
தமது பிரச்சினைகளுக்கு சுகாதார அதிகாரிகளிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ தீர்வு கிடைக்காத காரணத்தினால், எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்திருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.