பாதாள உலகக் குழுக்களின் வன்முறை உட்பட பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோரில் பலர் அரசியல்வாதிகளுடன் தொடர்புள்ளவர்கள் என அஸ்கரிய பௌத்த பீடத்தின் மாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.
பொல்கொல்ல போதிமல்கட விகாரையின் அறநெறி பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், அந்த குற்றவாளிகள் மேற்கொள்ளும் சமூக விரோத செயல்கள் தொடர்பான பொறுப்பில் இருந்து அரசியல்வாதிகள் விடுபட முடியாது.
போதைப் பொருள் என்ற பிணியில் இருந்து நாட்டை மீட்பதற்காக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் விசேட அக்கறையில் செயற்பட்டு வருவதால், அதனை முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அவர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் எனவும் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.