சர்வதேச நாணய நிதிய (IMF) பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் மின்சார சபை, மத்திய வாங்கி மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இந்த வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதியை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொள்வதில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.