மயிலத்தமடு பகுதியில் விவசாயிகள் நூதன போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் இரண்டாவது நாளான இன்று, பட்டி பொங்கல் கொண்டாடப்படுகின்றது.
இதனை முன்னிட்டு மயிலத்தமடுவைச் சேர்ந்த விவசாயிகள் இத்தினத்தை கறுப்பு தினம் எனக்கூறியும் பொங்கல் பானைக்கு கறுப்பு நிறத்திலான பட்டியை அணிவித்தும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலத்தமடு பகுதியில் அத்துமீறி விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் கால்நடைகளுக்கு ஏற்படும் வன்முறைகளுக்கு எதிராகவுமே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசின் நில ஆக்கிரமிப்பு மற்றும் பசு வதைக்கு எதிரான போராட்டம் 124வது நாளாக தொடர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.