இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோருக்கு இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
சுகாதார துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி 72 தொழிற்சங்கங்கள் இன்று காலை 6.30 முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் சுகாதார அமைச்சர் தலைமையிலான கலந்துரையாடலுக்கு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.