தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 24 ஆம் திகதி புருணை செல்லவுள்ளதுடன் அங்கு 26ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் திரு தர்மன் அங்கு விஜயம் செய்ய உள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் புருணை நாடுகளுக்கு இடையில் ராஜந்திர உறவுகள் ஏற்பட்டு நேற்றுடன் (15) 40 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது.
புருணை அரச மாளிகையில் ஜனாதிபதி தர்மனுக்கு உத்தியோபூர்வ வரவேற்பு வழங்கப்பட உள்ளதுடன் அந்நாட்டு மன்னருடன் இருதரப்பு சந்திப்பிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் அவரது மனைவி திருமதி ஜேன் இட்டோகி சண்முகரத்னம், சிங்கப்பூர் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, பிரதமர் அலுவலக அமைச்சரும், இரண்டாம் வெளியுறவு அமைச்சருமான மாலிக்கி ஒஸ்மான், கல்வி இணையமைச்சர் கான் சியாவ் ஹுவாங், பாராளுமன்ற உறுப்பினர்கள் மரியம் ஜாஃபர், ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம் ஆகியோரும் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர்.
சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம், இலங்கையின் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.