ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க, விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு காய்ச்ல் காரணமாக அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவருக்குப் பதிலாக இளம் கிரிக்கெட் வீரர் ஷெவோன் டேனியலை அணியில் இணைத்துக்கொள்ள அணி நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகின்றது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது. நிஸ்ஸங்க இல்லாத நிலையில் இலங்கை அணி சவாலை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தும் நிஸ்ஸங்கவிற்கு பதிலாக இளம் வீரர் ஷெவோன் டேனியலை இலங்கை அணிக்கு அழைக்க இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.