சோமாலிய கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட எம்.வி.லைலா நார்ஃபோக் (MV LILA NORFOLK) என்ற சரக்கு கப்பலை இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலை விடுவிக்குமாறு கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாவும், கப்பலில் உள்ள குழுவினர் பாதுகாப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன், கப்பலை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு படையினர் தயாராக உள்ளனர்” என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்னர்.
15 இந்திய மாலுமிகளுடன் எம்.வி.லைலா நார்ஃபோக் (MV LILA NORFOLK) என்ற சரக்கு கப்பல் சோமாலியா கடற்பகுதியில் வைத்து நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது.
குறித்த சரக்கு கப்பல் மத்திய ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோமாலியாவின் கடற் பகுதியில் சென்றபோது நேற்று மாலை கடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இந்திய கடற்படை உடனடி பதில் நடவடிக்கையை எடுத்திருந்தது. அதன் ஒருபகுதியாக இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னை தற்போது கடத்தப்பட்ட கப்பலை அடைந்துள்ளது.