5ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் கோலாகலமாக ஆரம்பம்; இலங்கை சார்பில் 21 வீரர்கள் பங்கேற்பு
ஜப்பானின் நகோயா நகரில் 5ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழா நேற்று (18) கோலாகலமாக நடைபெற்றது.
நகோயா நகரிலுள்ள பலோமா மிசுஹோ விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்தத் தொடக்க விழாவில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
இம்முறை போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 21 பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
திறமை, துணிவு, விடாமுயற்சி மற்றும் மன உறுதியை வெளிப்படுத்தும் இந்த சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களின் திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகின்றன.
இந்நிலையில், போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை வீரர், வீராங்கனைகள் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தி நாட்டுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

