அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை!

அமெரிக்காவில் அதிரடி நடவடிக்கை! – ஒரே வீச்சில் சுமார் 300,000 விசாக்களை ரத்து செய்த டிரம்ப் நிர்வாகம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) நிர்வாகத்தினால் இதுவரை சுமார் 3,00,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக வெளிநாட்டினருக்கான விசாக்களை அமெரிக்க அரசு ரத்துச் செய்யும் நடவடிக்கைகளின் வேகம் கணிசமாக அதிகரித்துள்ளது.

 

விசாவில் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் நாட்டின் சட்டங்களை மீறினாலோ அல்லது மோசடிகளில் ஈடுபட்டாலோ அது சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்க வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிபர் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதியில் மட்டும் சுமார் 1,75,000 விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருந்தன.

 

நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காகவே குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாடுகள் தீவிரமாக்கப்பட்டு, நாடுகடத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

இருப்பினும், டிரம்பின் இத்தகைய கடுமையான குடிவரவுக் கொள்கைகள் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தைப் பாதிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

 

குறிப்பாக, பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இடம்பெறும் போராட்டங்களில் பங்கேற்கும் வெளிநாட்டவர்களே அதிகளவில் குறிவைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

 

பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக அமெரிக்காவில் வசிக்கும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களும் தொழிலாளர்களும் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

 

இதேவேளை, விதிகளை மீறும் வெளிநாட்டினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

 

அமெரிக்க அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரிடையே பெரும் பரபரப்பும் அச்சமும் நிலவுகின்றது.

Recommended For You

About the Author: admin