பரீட்சைப் பெறுபேறுகள் மட்டுமே கல்வியின் வெற்றியைத் தீர்மானிக்காது – பிரதமர்
கல்வி மறுசீரமைப்பில் விளையாட்டை மேலதிகச் செயற்பாடாகக் கருதாமல், பிள்ளைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவசியமான அங்கமாகக் கருதுவதாகப் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 20ஆம் திகதி தியகமவில் நடைபெற்ற 40ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம், ஒழுக்கம், நேர முகாமைத்துவம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதில் விளையாட்டு முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இப்போட்டியில் மேல் மாகாணம் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைப் பெற்றதுடன், 23 புதிய போட்டிச் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டன. பொருளாதார அல்லது புவியியல் பின்னணி எதுவாக இருந்தாலும், அனைத்து மாணவர்களுக்கும் திறமைகளை வெளிப்படுத்த சம வாய்ப்புகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.


