ஆசியாவில் முதன்முறையாக இலங்கையில் சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு!

ஆசியாவில் முதன்முறையாக இலங்கையில் சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு!

சர்வதேச பொலிஸ் சங்கத்தின் 69ஆவது உலக மாநாடு நேற்று (21) கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானது.

69 நாடுகளை சேர்ந்த சுமார் 450 பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். இதன் ஆரம்ப நிகழ்வில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

 

மாநாட்டை முன்னிட்டு, கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகக் குழுப் புகைப்படம் எடுக்கப்பட்டதுடன், அங்கிருந்து ஹோட்டல் வரை நட்புறவு நடைபவனியும் இடம்பெற்றது.

 

ஒக்டோபர் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இம்மாநாடு, ஆசியாவில் நடைபெறும் முதலாவது சர்வதேச பொலிஸ் சங்க உலக மாநாடு என்ற வரலாற்றுச் சிறப்பைப் பெறுகிறது.

Recommended For You

About the Author: admin