இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இன்று காலை 5 மணி முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 366 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 464 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 29 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 358 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 41 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 475 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதனிடையே, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 236 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.