கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றி பெறாது: ஜப்பான்

சீனாவின் பங்களிப்பு இன்றி கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கை வெற்றி பெறுவது கடினமானது என்பதை ஜப்பான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மிகப்பெரிய கடன் வழங்குநராக சீனா காணப்படுகின்றமையே இதற்கு காரணமென ஜப்பான் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவாதங்கள் இன்றி, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு முழுமையான நிதி வசதியைப் பெற முடியாது என நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுத் தலைவர் பீட்டர் ப்ரூவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தியுள்ளார்.

இருப்பினும், கடன் மறுசீரமைப்பு தொடர்பாக பாரிஸ் கிளப்புடன் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உடன்பட்டுள்ள நிலையில், சீனாவின் நிலைப்பாடு மாறாக காணப்படுகின்றது.

உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற 12 பில்லியன் அமெரிக்க டொலர் கடனில் சுமார் 04 பில்லியன் டொலர்களை மட்டுமே மறுசீரமைக்க சீனா விருப்பம் தெரிவித்திருந்தது. இருப்பினும், அதற்கு எவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து சீனா இன்னும் வெளியிடவில்லை.

குறித்த நிபந்தனைகள் வெளியிடப்படும் வரை இந்தியா, ஜப்பான் மற்றும் பாரிஸ் சமூகம் போன்றவை தங்கள் ஒப்பந்தத்தினை முறையாக செயற்படுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவை தரித்து ஏனையவர்களின் ஒப்பந்தங்களை நடைமுறையில் ஏற்றுக்கொள்ளும் திறன் சர்வதேச நாணய நித்தியத்திற்கு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சர்வதேச நாணய நிதியத்தின் இறுதிக்கட்ட கடன் திட்டத்தில் வெற்றியடைவதற்கு தேவையான ஆதரவை வழங்குமாறு சீனாவிடம் இலங்கை பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளது

Recommended For You

About the Author: admin