கனடாவில் உயரும் பெற்றோல் விலை

கனடாவின் ரொறன்ரோவில் புத்தாண்டில் பெற்றோலின் விலை உயரும் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என துறைசார் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசாங்கத்தின் கார்பன் வரி அதிகரிப்பிற்கு நிகராக ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 2.5 முதல் 2.6 சதவீதம் வரையில் உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோ மெட்ரோ பொலிட்டன் பல்கலைக்கழகத்தின் சர்வதேச கற்கைக்கான பிரதானி மைக்கல் மான்ஜுரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விலை அதிகரிப்பானது உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சியின் காரணமாக சமனிலை அடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், உலகளாவிய ரீதியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையினால் விலைகளில் மாற்றம் ஏற்படும் சாத்தியங்களை மறுக்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin