கடந்த ஒரு வரமாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலானது அதில் அண்ணாமலை புகைப்படத்தை பார்த்து யார் இவர் என வைகோ கேட்க கீழே அமர்ந்து இருந்த திருமுருகன் காந்தி தொடங்கி நக்கீரன் கோபால் என பலரும் எழுந்து சிரித்து கை தட்டி மகிழ்ந்தனர் அதாவது அண்ணாமலையை கிண்டல் செய்துவிட்டார் வைகோ என பாஜக எதிர்பாளர்கள் பலரும் கிண்டல் செய்து வந்தனர்.
ஆனால் அவர்கள் எதிர்ப்பு எல்லாம் ஒரு வாரம் கூட நீடிக்க வில்லை அண்ணாமலை செய்த சிறப்பான சம்பவம் மூலம் தற்போது ஒட்டுமொத்த தமிழகமும் அண்ணாமலை யார் என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அறங்கேரி இருக்கிறது.
அண்ணாமலை வட இந்திய பால் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு ஆவின் பால் குறித்து தவறான தகவலை பரப்பி வருகிறார் என அமைச்சர்மனோதங்கராஜ் குற்றம் சுமத்தி இருந்தார் இந்நிலையில், தான் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், இல்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அண்ணாமலை தெரிவித்ததாவது வடமாநில பால் உற்பத்தி நிறுவனங்களிடம் கையூட்டு பெற்று, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக நான் செயல்படுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியிருக்கிறார். 48 மணி நேரம் அவகாசம் தருகிறேன்.
திமுக அரசின் முழு கட்டுப்பாட்டில் உள்ள தமிழக காவல்துறை மூலமாக விசாரித்து, அமைச்சர் மனோ தங்கராஜ், தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பொதுவெளியில் வெளியிடவேண்டும். குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால், தவறான தகவலை பகிர்ந்தமைக்கு மன்னிப்பு கோரி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அண்ணாமலை சவால் விடுத்து இருக்கிறார்.
இது தற்போது பெண்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி இருக்கிறது ஆவின் பால் குறித்து அண்ணாமலை பகிர்ந்த தகவல் மட்டுமல்ல அமைச்சர் மனோ தங்கராஜிற்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுத்த சம்பவமும் தான் தற்போது தமிழக ஊடகங்கள் தொடங்கி கிராமங்கள் வரை பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இது ஒருபுறம் என்றால் முதல்வர் ஸ்டாலினும் கோவில்கள் குறித்த கருத்து குறித்து அண்ணாமலை மீது விமர்சனம் வைத்தது என ஒரு வாரத்தில் ஆளும் கட்சியே அண்ணாமலைக்கு எதிராக நின்றது முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அண்ணாமலையை விமர்சனம் செய்வதில் இருந்தே அண்ணாமலை யார் என தெரிகிறதா? இப்போது வைகோவிற்கு பாஜகவினர் மட்டுமல்ல பொதுமக்களும் கேள்வி மூலம் பதில் கொடுக்க தொடங்கி விட்டனர்.
#Dmk#Bjp#Annamalai bjp#vaiko#durai vaiko speech#annamalai#annamalai bjp#vaiko on annamali#durai vaiko#vaiko annamalai#durai vaiko interview#durai vaiko about mk stalin#durai vaiko latest speech#vaiko speech#vaiko slams annamalai#durai vaiko in politics#vaiko press meet#vaiko so