இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆனால் தமிழகத்தில் நீட் தேர்விற்கு பலத்த எதிர்ப்பு நிலவுகிறது ஏனென்றால் இந்த நீட் தேர்வில் ஏற்படும் தோல்வியை தாங்கிக்க முடியாமல் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவமும் பல வருடங்கள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியவில்லை என்ற விரத்தியால் ஏற்படும் மன உளைச்சலையும் தாங்க முடியாதவர்கள் தங்களையே வருத்திக் கொள்கிறார்கள் என ஆளும் திமுக தரப்பு கூறி வருகிறது.
ஆனால் இந்த நிலை தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது எனவும் நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீட் தேர்வு குறித்து விழிப்புணர்வுகள் அவற்றைக் கண்டு அஞ்ச வேண்டாம் என்ற கருத்தரங்குகளும் பல கல்லூரி மற்றும் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
இதன் விளைவாக இந்த வருடம் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மாநில அளவில் முதலிடத்தில் படித்து பெரும் சாதனை புரிந்துள்ளனர். அதுவும் எந்த ஒரு பயிற்சி வகுப்பும் சொல்லாமல் தனித்தே தன்னால் முடிந்தவரை படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களை பெற்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது சமூகத்தின் முதல் மருத்துவராக படிக்கும் வாய்ப்பையும் பெற்று வருகின்றனர்.
ஆனால் தமிழகத்தின் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் திமுக உறுதியாக இருந்து வருகிறது தேர்தலுக்கு முன்பு திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்தது திமுக. ஆனால் ஆட்சி பொறுப்பை ஏற்று மூன்று ஆண்டுகளாகியும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய முடியாமல் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து வருகிறது.
அந்த வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்விற்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தில் நடத்தினார் அதற்கு பிறகு தற்போது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள மக்களிடம் நீட் விலக்கிற்காக கையெழுத்துகளை பெரும் நடவடிக்கைகளில் திமுக ஈடுபட்டு வருகிறது. இந்த இயக்கத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
திமுக இளைஞரணி செயல் வீரர்கள் இந்த நடவடிக்கையை ஒவ்வொரு பகுதியிலும் இருசக்கர வாகனங்கள் மூலம் சென்று அங்கிருக்கும் மக்களிடம் கையெழுத்துக்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த பத்மப்ரியா என்பவர் சமீபத்தில் திமுகவின் நிர்வாகியாக மாறினார்.
இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திமுக இளைஞரணி செயல்வீரர்கள் நீட் தேர்விற்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு திமுக நிர்வாகி பள்ளி குழந்தைகளிடம் நீட் தேர்விற்கு எதிரான கையெழுத்தை பெறுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
பத்மப்ரியாவின் இந்த பதிவிற்கு கமெண்ட்டுகள் குவிந்து வருகிறது. மேலும் இதற்கு முன்பு இவர் மக்கள் நீதி மையத்தில் நிர்வாகியாக இருக்கும் பொழுது நீட் தேர்வு வருவதற்கு யார் காரணமாக இருக்கிறார்களோ அவர்களே தற்பொழுது நீட்டிற்கு எதிராக போராடி வருகிறார்கள் என்று பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதோடு பத்மபிரியா பேசிய அந்த வீடியோவையும் பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர் இணைவாசிகள்!! சற்றென்று மாறும் பச்சோந்தியா இவர் என்றும் கமெண்ட்கள் பறக்கிறது!!