ஈரானுக்கு உதவிய இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
ஈரானின் ரகசிய எண்ணெய் வர்த்தகத்திற்கு உதவியதாகக் குற்றம் சாட்டி, OCEANIEK TECHNOLOGIES, ARYAVART SHIP MANAGEMENT உள்ளிட்ட 9 இந்திய நிறுவனங்கள் மற்றும் 4 தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
குறித்த நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் அமெரிக்க அதிகார வரம்பிற்குட்பட்ட சொத்துக்கள் முடக்கப்படுவதுடன், நிதிப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

