இலங்கைக்குக் கடத்தல் திட்டம் முறியடிப்பு: காவல்துறையினரின் அதிரடி முற்றுகை!

இலங்கைக்குக் கடத்தல் திட்டம் முறியடிப்பு: காவல்துறையினரின் அதிரடி முற்றுகை!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்ட இரு தனித்தனி முற்றுகைகளில், இலங்கைக்குக் கடத்த முயன்ற 2 இலட்சம் வலி நிவாரணி மருந்துகள், 531 கிலோ சுக்கு மற்றும் 1,500 மஞ்சள் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

வேதாளை மற்றும் புதுமடம் கடலோரப் பகுதிகளில் கியூ பிரிவு மற்றும் கடல்சார் காவல்துறையினர் மேற்கொண்ட முற்றுகைகளின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

வேதாளையில் பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மருந்துகளின் சர்வதேச மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி மற்றும் இயந்திரத்துடன் கூடிய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் தப்பியோடியவர்களைத் தேடும் நடவடிக்கைகளும், மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin