சச்சின் மகளுக்கு நடந்த கொடூரம்… சிக்கிய சச்சின் மகள் சாரா!

மாறிவரும் உலகத்திற்கேற்ப ஒவ்வொரு நாடு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

அதில் அறிவியல் வளர்ச்சியும் தற்போது அபரிவிதமான வளர்ச்சியை கண்டு வருகிறது அந்த வகையில் ஏ ஐ தொழில்நுட்பம் என்பது அதிகரித்துவிட்டது. இவை நமக்கு பல்வேறு வகையில் உதவிகரமாக இருந்தாலும் ஏ ஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்படும் போலி படங்கள் வீடியோக்கள் மிகப் பெரிய அளவில் சர்ச்சையையும் பாதிப்பையும் ஏற்படுகிறது.

அதுவும் சமீப நாட்களாக நடிகைகளின் முகம் இந்த தொழில்நுட்ப மூலம் போலியாக சித்தரிக்கப்பட்டு சமூகவலையத்தளங்களில் பதிவிடப்படுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

முதலில் நடிகையின் ராஸ்மிகா மந்தனாவின் முகம் வேறு ஒருவரின் உடலமைப்போடு பொருத்தப்பட்டிருந்தது, இதற்க்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. அமிதாப்பச்சன் கூட இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

அதற்குப் பிறகு நடிகை காஜோலின் முகமும் போலியாக சித்தரிக்கப்பட்டது. இவ்விருவருக்கும் இந்திய திரை உலகம் ஆதரவளித்ததோடு இதுபோன்ற போலியாக பதிவிடுவோருக்கு கண்டனங்களை தெரிவித்தது.

இவர்களின் வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி குறித்த போலி வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நடிகைகளின் முகங்கள் போலியாக பதிவிடப்பட்ட பொழுது மத்திய அரசின் தலையிட்டு மத்திய தகவல் தொழில்நுட்பம் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுத்தது.

அந்த நிலையில் பிரதமரின் போலி வீடியோவும் வெளியானது மத்திய அரசின் ஏ ஐ குறித்த நடவடிக்கைகளுக்கு வேகமளித்தது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை பொறுப்புடன் கையாள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி ஜி 20 வரை இவ்விவகாரத்தை எடுத்துச் சென்றார்.

அதுமட்டுமின்றி டீப் பேக் வீடியோக்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கை விடும்படி சாட்ஜிபிடி குழுவிடம் பிரதமர் வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி கர்பா நடனம் ஆடுவது போன்று பரப்பப்பட்ட போலி வீடியோவிற்கு வருத்தம் தெரிவித்தார். இதனால் டீப் பேக்கிற்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அறிவித்தார்.

அதோடு மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடகங்களுக்கு ஏழு நாட்களுக்கு கெடு விதித்ததோடு டீப் பேக்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு அதிகாரியை நியமிக்கப்பட உள்ளதாகவும், ஐடி விதிகளை மீறுவது குறித்து செல்போன் பயனர்களுக்கு தெரிவிக்கவும் எஃப் ஐ ஆர் பதிவு செய்வதில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்யும் என்றும் கூறினார் மற்றும் டீப் பேக் மூலம் போலிகளை உருவாக்கி மக்களின் பார்வைக்கு பதிவிடப்பட்டால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

மத்திய அரசால் இது போன்ற அதிரடி நடவடிக்கைகள் போலி படங்கள் மற்றும் வீடியோ களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாராவின் புகைப்படம் டீப் பேக்கில் வெளியிடப்பட்டுள்ளது. அவரது சகோதரன் முகத்திற்கு பதிலாக சுப்மன் கில்லின் முகம் வைத்து டீப் பேக் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாரா தனது கருத்தை தெரிவித்துள்ளார் அதாவது தான் சமூக வலைதள பக்கத்தில் இல்லை என்றும் இது போன்ற புகைப்படத்தை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வலியுறுத்தியுள்ளார். இதனால் இணையதளம் மிகவும் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ளது.

 

#Sac sachin tendulkar#sachin tendulkar batting#sachin tendulkar india#sachin tendulkar cricket#sachin tendulkar interview#sachin tendulkar vs england#sachin#sachin tendulkar first match#tendulkar#sachin tendulkar movie#arjun tendulkar#sachin ramesh tendulk#Ras rashmika mandanna#rashmika mandanna songs#rashmika mandanna interview#rashmika mandanna movies#rashmika mandanna new song#rashmika#rashmika mandanna hindi dubbed movie#rashmika mandanna dance#rashmika mandana#actress rashmika mandanna#rashmika mandann

 

 

Recommended For You

About the Author: admin