ஒரே நாளில் சுமார் ரூ.80,000 கோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு!

ஒரே நாளில் சுமார் ரூ.80,000 கோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு! ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி!

இந்தியாவின் பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, ஒரே நாளில் சுமார் 8.5 பில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ.80,000 கோடி) அதிகரித்துள்ளது.

 

நவம்பர் 2ஆம் திகதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 12 சதவீதம் உயர்ந்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 88.8 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக ஃபோர்ப்ஸ் நிகழ்நேர பில்லியனர் பட்டியல் தெரிவித்துள்ளது.

 

இதனால், சுமார் 84 பில்லியன் டொலர் சொத்து மதிப்பைக் கொண்ட பைட்டான்ஸ் நிறுவன இணை நிறுவனர் ஜாங் யிமிங்கை முந்தி, முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தைப் பிடித்துள்ளார்.

 

ரிலையன்ஸ் நிறுவனத்தின் காலாண்டு நிதி முடிவுகள் மற்றும் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்குச் சந்தைப் பட்டியலிடல் ஆகியவை பங்குகளின் உயர்வுக்குப் பங்களித்த காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.

Recommended For You

About the Author: admin