இஸ்ரேலிடம் இருந்து நவீன ஆளில்லா விமானங்களை (UAV) கொள்வனவு செய்யும் இலங்கை.

இஸ்ரேலிடம் இருந்து நவீன ஆளில்லா விமானங்களை (UAV) கொள்வனவு செய்யும் இலங்கை.

இஸ்ரேலின் Israel Aerospace Industries (IAI) நிறுவனத்தின் துணை நிறுவனமான BlueBird Aero Systems நிறுவனத்திடமிருந்து நவீன ஆளில்லா விமானக் கட்டமைப்புகளை கொள்வனவு செய்ய இலங்கை தீர்மானித்துள்ளது.

இதற்காக 4.261 பில்லியன் ரூபாவை (426.1 கோடி ரூபா) செலவிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் மொத்தம் 4 ஆளில்லா விமானங்கள் வழங்கப்படவுள்ளதுடன், அவற்றில் இரண்டு ThunderB VTOL வகை விமானங்களும் அடங்குகின்றன.

மேலும் இந்த விமானங்களை இயக்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கான பராமரிப்பு சேவைகள் வழங்கப்படும்.

📌 இந்த ஆளில்லா விமானங்கள் பின்வரும் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளன:

1. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்தை (EEZ) கண்காணித்தல். இலங்கையின் கடல்சார் பிரத்தியேக பொருளாதார வலயம், அதன் நிலப்பரப்பை விட சுமார் எட்டு மடங்கு பெரியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2. கடல்சார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள்.

3. இயற்கை அனர்த்தங்களின்போது மீட்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பணிகளுக்கு உதவுதல்.

இஸ்ரேலுடன் நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு

1996ஆம் ஆண்டிலேயே இலங்கை Superscout ஆளில்லா விமானங்களைக் கொள்வனவு செய்திருந்ததாகவும், பிராந்தியத்தில் அவற்றைக் கொள்வனவு செய்த முதல் நாடாக இலங்கை இருந்ததாகவும் இந்தத் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றிலிருந்து இஸ்ரேலின் IAI நிறுவனத்துடன் இலங்கை வர்த்தகத் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin