விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றால் ரூ. 5 இலட்சம் இழப்பீடு!

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றால் ரூ. 5 இலட்சம் இழப்பீடு! இலங்கையில் அதிகரிக்கப்பட்ட நிதி உதவி!

வாகன விபத்தை ஏற்படுத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்லும் சாரதிகளால் பாதிக்கப்படுவோருக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் நிதி உதவி அதிகரிக்கப்பட்டுள்ளது.

தேசிய வீதிப் பாதுகாப்புச் சபையினால் இந்தத் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

🔥 2026 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய இழப்பீட்டு விபரங்கள்:

🔴 விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால்:

முன்னர் ரூ. 250,000 வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ. 500,000 (5 இலட்சம்) வழங்கப்படும்.

🟠 கடுமையான காயங்களுக்கு உள்ளானால்:

முன்னர் ரூ. 150,000 வழங்கப்பட்ட நிலையில், தற்போது அதிகபட்சமாக ரூ. 300,000 (3 இலட்சம்) வழங்கப்படும்.

📌 விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளும் இடங்கள்:

✅ தேசிய வீதிப் பாதுகாப்புச் சபை

✅ நாடளாவிய பொலிஸ் நிலையங்கள்

✅ பிரதேச செயலகங்கள்

📧 மின்னஞ்சல்: ncrstransport@gmail.com

📞 தொலைபேசி: 011-269 6890

இந்தத் திட்டம், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் செல்லும் சாரதிகளால் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் நிதி ஆதரவாக அமையும்.

Recommended For You

About the Author: admin