ஐசிசி தலைவராக ஜெய் ஷா இரண்டாவது தவணைக்கும் மீண்டும் நியமனம்!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது தவணைக்கும் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி சபை மற்றும் குழுக் கூட்டங்களைத் தொடர்ந்து இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐசிசி சபையின் ஆதரவுடன் போட்டியின்றி அவர் மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறவுள்ள நிலையில், கிரிக்கெட்டை உலகளவில் விரிவுபடுத்துவதும், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தனது முக்கிய இலக்குகளாக இருக்கும் என ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
மேலும், வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலன், கிரிக்கெட்டின் நீண்டகால வளர்ச்சி ஆகியவற்றுக்கும் முன்னுரிமை வழங்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

