மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர்!

மும்பை வீதியில் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய அரச தம்பதியினர்!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் தமது மூன்று நாள் இந்தியப் பயணத்தை மும்பையில் வீதிக் கிரிக்கெட் விளையாடி ஆரம்பித்துள்ளனர்.

திங்கட்கிழமை மும்பையின் வரலாற்றுச் சிறப்புமிக்க பல்லார்ட் எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் உள்ளூர் சிறுவர்களுடன் அவர்கள் கலந்துகொண்டனர்.

 

இதனைத் தொடர்ந்து மும்பை மெட்ரோ ரயிலில் பயணிக்கவுள்ள அரச தம்பதியினர், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான எர்த்ஷாட் விருதின் இறுதிப் போட்டியாளர்களையும் சந்திக்கவுள்ளனர்.

 

இந்தியப் பயணத்தின் இறுதியில், புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். புற்றுநோய்க்கான தடுப்பு சிகிச்சைக்குப் பின்னர் இளவரசி கேட் மேற்கொள்ளும் முக்கியத்துவம் வாய்ந்த வெளிநாட்டுப் பயணமாக இது அமைந்துள்ளது.

Recommended For You

About the Author: admin