பாதுகாப்பு அச்சுறுத்தல்: கத்தார் FIFA U-17 உலகக் கிண்ணத்திலிருந்து அமெரிக்கா விலகியது!
கத்தாரில் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள FIFA U-17 கால்பந்து உலகக் கிண்ணத் தொடரிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
கத்தாருக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மூன்றாம் நிலை பயண எச்சரிக்கை மற்றும் தூதரகப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு அறிவுறுத்தல்களும் இந்த முடிவுக்குக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
போட்டிக்கான பயிற்சி முகாமும் உலகக் கிண்ணப் பங்கேற்பும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே முதன்மையானது என அமெரிக்க கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

