தொழில் தேடி சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்ல வேண்டாம்!

தொழில் தேடி சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்ல வேண்டாம்! பொதுமக்களுக்கு அமைச்சு எச்சரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்காக சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

 

மலேசியா, டுபாய், ஓமான் உள்ளிட்ட நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறப்படும் வாக்குறுதிகளை நம்பி வெளிநாடு செல்லும் பல இலங்கையர்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

 

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை நாடுவோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறையாகப் பதிவு செய்துகொண்டு, சட்டபூர்வ நடைமுறைகளைப் பின்பற்றியே வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் எனவும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin