அமெரிக்காவின் நியூயோர்க்கில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது; இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது; இருவர் உயிரிழப்பு, 17 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

புரூக்ளின் பகுதியில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களில் ஏழு சிறுவர்களும் தீயணைப்பு வீரர் ஒருவரும் அடங்குகின்றனர். இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

சம்பவ இடத்தில் 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன. கட்டிடம் இடிந்து விழுந்தமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin