இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் டொலரைத் தாண்டியது – ஜனாதிபதி!
இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பு 7 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வாகன மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காக மேலதிகமாக 5 பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ள நிலையிலும் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக 1.6 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டில் இதுவரை 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், எரிபொருள் இறக்குமதிக்கான மேலதிக செலவு 2 பில்லியன் டொலர்களாக அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

