கூரை சூரிய மின்சக்தி பயனாளர்களுக்கு மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ ரூ.3.5 பில்லியன் நிவாரணம்
கூரை சூரிய மின்சக்தி கட்டமைப்புகளைப் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின்கல சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதற்காக 3.5 பில்லியன் ரூபா நிவாரணப் பொதியை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.
இதன்படி, புதிதாக சூரிய மின்சக்தி கட்டமைப்புகளை நிறுவுவோருக்கு ஒவ்வொரு ஒரு கிலோவாட் மின்கல சேமிப்புத் திறனுக்கும் 25,000 ரூபா நிதி ஊக்குவிப்பு வழங்கப்படும்.
அதிகபட்சமாக 10 கிலோவாட் வரை இந்தச் சலுகை வழங்கப்படுவதுடன், ஒரு வீட்டுக்கு 250,000 ரூபா வரை நிவாரணம் கிடைக்கும்.
மேலும், இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்கலங்களுக்கான 10 சதவீத வரியையும் நீக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.

