வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்த அரசு மற்றும் மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகள் வெற்றி!
நாட்டிலிருந்து அந்நியச் செலாவணி அதிகளவில் வெளியேறுவதைத் தடுப்பதற்காக அரசாங்கமும் இலங்கை மத்திய வங்கியும் இணைந்து மேற்கொண்ட கொள்கை ரீதியான நடவடிக்கைகள் நேர்மறை முடிவுகளை அளித்துள்ளதாக வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கை திணைக்களம் தெரிவிப்பதாக Sunday Morning செய்தி வெளியிட்டுள்ளது.
வாகன இறக்குமதிக்காக விதிக்கப்பட்ட 50% தற்காலிக சுங்க இறக்குமதி வரிப் மேலதிக கட்டணம் (Surcharge) மற்றும் மத்திய வங்கி அறிமுகப்படுத்திய கடன் மற்றும் பெறுமதி விகித (LTV) கட்டுப்பாடுகள் காரணமாக வாகன இறக்குமதி கணிசமாகக் குறைந்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஐ.ஜே. அபேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, 2026 மே 16 முதல் மூன்று மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் பல வாகன வகைகளுக்கு இந்த 50% வரி விதிக்கப்பட்டதுடன், மே 25 முதல் வாகனக் கடன்களுக்கான எல்.டீ.வி (LTV) விகிதத்தையும் மத்திய வங்கி 10 சதவீதத்தால் குறைத்தது.
உலகளாவிய பொருளாதார ஸ்திரமற்ற தன்மையால் எழும் நிதியியல் அபாயங்களைக் கட்டுப்படுத்தி, நாட்டின் நிதியமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதே இந்நடவடிக்கையின் முதன்மை நோக்கமாகும்.

