இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வருகிறதா? S&P அறிக்கை

இலங்கையின் பொருளாதாரம் மீண்டு வருகிறதா? S&P அறிக்கை என்ன சொல்கிறது?

இலங்கையின் ‘பரிமாற்றம் மற்றும் மாற்றுத் திறன்’ மதிப்பீட்டை S&P நிறுவனம் ‘CCC+’ இலிருந்து ‘B-‘ ஆக உயர்த்தியுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

 

2022 பொருளாதார நெருக்கடிக்குப் பின் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம், வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் நாட்டின் பொருளாதார மீட்சியையும் வெளிப்படுத்துகிறது.

இயற்கைப் பேரழிவுகள் மற்றும் மத்திய கிழக்கு போர்ச் சூழல் போன்ற உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கடன் செலுத்தும் திறன் ‘C+’ மட்டத்தில் உறுதியாக பேணப்படுகிறது.

 

மேலும், Institute of International Finance (IIF) அறிக்கையின்படி, கடன் வெளிப்படைத்தன்மையில் 50க்கு 43.67 புள்ளிகள் பெற்று இலங்கை 2026ஆம் ஆண்டில் உலகளவில் 4ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Recommended For You

About the Author: admin