இலங்கையில் நடந்த சோகம்  நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

இலங்கையில் நடந்த சோகம்  நீராடச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

மாத்தறை – தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள ‘கலேதொல’ நீரோடையில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன 4 இளைஞர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் கணினி நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் 7 இளைஞர்கள் அடங்கிய குழுவினர் நேற்றுமுன் (07) தெனியாய, பெவரலிய பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

 

அங்கு அக்குழுவில் 6 பேர் கலேதொல பகுதியில் நீராடச் சென்ற நிலையில், அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல்போயிருந்தனர்.

 

அதற்கமைய, கடற்படை, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட நிலையில் நேற்று (08) காலை இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகலில் மேலும் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டிருந்தது.

 

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், காணாமல்போயிருந்த இறுதி இளைஞரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.

 

“அறியாத நீர்நிலைகள், ஆழமான பகுதிகள் மற்றும் நீரோடைகளில் குளிப்பதைத் தவிர்க்கவும். மழைக்காலங்களில் திடீரென நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் அதிக எச்சரிக்கையுடன் செயற்படுவதன் மூலம் அசம்பாவிதங்களையும் உயிரிழப்புகளையும் தடுத்துக் கொள்ள முடியும்.”

Recommended For You

About the Author: admin