500 மில்லியன் ரூபா செலவில் 50 நெல் உலர்த்தும் இயந்திரங்கள் – கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கும் திட்டம் ஆரம்பம்!
இலங்கையில் விவசாயிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, 500 மில்லியன் ரூபா செலவில் 50 நவீன நெல் உலர்த்தும் இயந்திரங்களை கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தலைமையில் இதற்கான ஆரம்ப நிகழ்வும் விழிப்புணர்வுச் செயலமர்வும் அண்மையில் நடைபெற்றது.
ஒவ்வொரு இயந்திரமும் சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியுடையதுடன், நாளொன்றுக்கு 20 மெட்ரிக் தொன் நெல்லை உலர்த்தும் திறன் கொண்டது.
இதன் மூலம் மழைக்காலங்களில் நெல்லை உலர்த்துவதில் விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைப்பதுடன், இடைத்தரகர்களின்றி கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.

