ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 9 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பியது இலங்கை அணி!

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 9 பதக்கங்களை வென்று தாயகம் திரும்பியது இலங்கை அணி!

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டிற்கான 5ஆவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் (Asian Para Games) 9 பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இலங்கை அணி நேற்று (26) நாடு திரும்பியது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் கௌரவத்துடன் வரவேற்றனர்.

இம்முறை போட்டிகளில் திறம்படச் செயல்பட்ட இலங்கை அணி 2 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 9 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கைக்குத் தங்கப் பதக்கங்களைப் பெற்றுத் தந்த பிரதீப் சோமசிரி ஆண்களுக்கான 1500 மீட்டர் (T46) ஓட்டப் போட்டியிலும், ஜனனி தனஞ்சனா விக்கிரமசிங்க பெண்களுக்கான நீளம் பாய்தல் (T47) போட்டியிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

வெள்ளிப் பதக்கங்களை ஜனனி தனஞ்சனா விக்கிரமசிங்க, கலீனா பஸ்நாயக்க, பாலித பண்டார மற்றும் நுவன் இந்திக கமகே ஆகியோர் வென்றெடுத்தனர்.

அதேவேளை, மொஹமட் சஃப்ரன், நவீட் ரஹீம் மற்றும் சமன் சுபசிங்க ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை நாட்டிற்குப் பெற்றுத் தந்தனர்.

Recommended For You

About the Author: admin