ஆபிரிக்காவில் முதன்முறையாக இளையோர் ஒலிம்பிக் – கத்தார் வீரர்கள் பங்கேற்பு!
செனகலில் நடைபெறும் டக்கார் 2026 இளையோர் ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப விழாவில் கத்தார் தேசிய அணி பங்கேற்றுள்ளது. ஆசிய ஒலிம்பிக் பேரவையின் தலைவரும், கத்தார் ஒலிம்பிக் குழுவின் தலைவருமான ஷேக் ஜோவான் பின் ஹமத் அல் தானி முன்னிலையில் இந்த ஆரம்ப விழா நடைபெற்றது.
இதன்போது, கத்தார் அணியின் சார்பில் நீச்சல் வீரர் ஆதம் மோர்சி, தேசியக் கொடியை ஏந்தி அணிவகுப்பில் கலந்துகொண்டார்.
இம்முறை போட்டிகளில் நீச்சல், தடகளம் மற்றும் வாள்வீச்சு உள்ளிட்ட விளையாட்டுப் பிரிவுகளில் கத்தாரைப் பிரதிநிதித்துவப்படுத்த நான்கு இளம் வீரர்கள் பங்கேற்கின்றனர்.
செனகலின் டக்கார், டியாம்னியாடியோ மற்றும் சாலி ஆகிய நகரங்களில் நடைபெறும் இப்போட்டிகளில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,700 வீரர்கள் 25 விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும், ஆபிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வாக டக்கார் 2026 இளையோர் ஒலிம்பிக் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

