யாழ்.வீராங்கனை டிலக்சனாவுக்கு சர்வதேச கபடி அரங்கில் விருது!

யாழ்.வீராங்கனை டிலக்சனாவுக்கு சர்வதேச கபடி அரங்கில் விருது!

2026ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கபடி சம்பியன்ஷிப் தொடரில், இலங்கை மகளிர் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணம், இளவாலையை சேர்ந்த விமலேந்திரன் டிலக்சனா, போட்டியின் சிறந்த ரைடர் விருதை வென்றுள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் இத்தொடரின் லீக் போட்டியில் பங்களாதேஷ் மகளிர் அணியை எதிர்கொண்ட இலங்கை அணி 31–20 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இப்போட்டியில் சிறப்பான ரைடிங் திறமையை வெளிப்படுத்திய டிலக்சனா, இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியதுடன், சிறந்த ரைடர் விருதையும் பெற்று கொண்டார்.

இளவாலை மண்ணில் இருந்து சர்வதேச கபடி அரங்கில் தடம் பதித்து விருதை வென்றுள்ள டிலக்சனாவின் சாதனைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இவரது வெற்றி யாழ்ப்பாணத்துக்கும் இலங்கைக்கும் பெருமை சேர்த்துள்ளது.

Recommended For You

About the Author: admin