தொடர் மழையின் தாக்கம்… மரக்கறிச் சந்தையில் விலை அதிகரிப்பு!
சந்தையின் பல பகுதிகளில் காய்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளன.
இதற்கமைய, ஒரு கிலோ போஞ்சி தற்போது 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கரட்டின் விலை இன்று 360 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
ஒரு கிலோ கோவாவின் விலை 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையிலும், ஒரு கிலோ பீட்ரூட்டின் விலை 350 ரூபாயாலும் அதிகரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகக் காய்கறிப் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

