ChatGPT, Claude-க்கு தடை: சுவீடன் அரசாங்கம் அதிரடி முடிவு!
தகவல் தொழில்நுட்பப் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்திற்கொண்டு, சுவீடன் அரசாங்க அதிகாரிகள் உத்தியோகபூர்வப் பணிகளுக்காக OpenAI இன் ChatGPT மற்றும் Anthropic இன் Claude செயற்கை நுண்ணறிவு (AI) சேவைகளைப் பயன்படுத்துவதற்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட Microsoft Copilot போன்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளை மட்டுமே அரச ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், ஒப்புதல் இல்லாமல் இவற்றைப் பயன்படுத்துவது நாட்டின் தகவல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும் சுவீடனின் தலைமை தகவல் அதிகாரி (CIO) மைக்கேல் வெட்டர்கிரான்ட்ஸ் (Michael Wettercrantz) தெரிவித்தார்.
பாதுகாப்பற்ற செயற்கை நுண்ணறிவு கருவிகளில் அதிகாரிகள் முக்கியமான அரசு தகவல்களை உள்ளீடு செய்வதும், அவற்றின் பதில்களைப் பயன்படுத்துவதும் தொடர்பாகப் பல சிக்கல்களைச் சுவீடன் போக்குவரத்து நிர்வாகம் அண்மையில் நடத்திய உள் தணிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இருப்பினும், குறிப்பிட்ட நோக்கங்களுக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட “சிறப்பு AI தளம்” மூலம் குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே ChatGPT மற்றும் Claude ஆகியவற்றைப்பயன்படுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

