அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய மின்சார பறக்கும் காரான ‘ரோட்ஸ்டர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய மின்சார பறக்கும் காரான ‘ரோட்ஸ்டர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரோட்ஸ்டர் காரை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சரிவுப்பாதையில் தலைகீழாக ஓட்டி,

காற்றில் பறந்தபடி சிறிய சாகசங்களைச் செய்து, பாதுகாப்பாக தரையிறக்கி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

 

சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பது போன்றும், அந்த இடத்தை ரோட்ஸ்டர் கார் பறந்து பாதுகாப்பாக கடக்கும் வகையிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

இந்த செயல்விளக்க காணொலியை பகிர்ந்துள்ள டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், “எதிர்காலத்தில் பறக்கும் கார்கள் வரும் என்பது நிரூபணமாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பொதுச் சாலைகளில் பறப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை.

 

டெஸ்லா தனது அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் காரை முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு அறிவித்தது. தற்போது மறுவடிவமைக்கப்பட்ட மின்சார ரோட்ஸ்டர் காரை டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது.

 

இந்த ரோட்ஸ்டர் காருக்கு தேவையான அனுமதிகளை பெற்ற பிறகு, 2028 முதல் டெஸ்லா நிறுவனம் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin