செயற்கை நுண்ணறிவால் உலகளவில் 40% வேலைகள் மாற்றமடையும் அபாயம்

செயற்கை நுண்ணறிவால் உலகளவில் 40% வேலைகள் மாற்றமடையும் அபாயம்: சர்வதேச நாணய நிதியம் (IMF) எச்சரிக்கை!

செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முதலீடுகள் உலகப் பொருளாதார வளர்ச்சியை சுமார்

 

3% என்ற அளவில் தக்கவைக்க உதவுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார்.

 

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர்,

 

அதேவேளையில் AI தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உலகளவில் சுமார் 40% வேலைகள் காலப்போக்கில் மாற்றமடையவோ, தரம் குறையவோ அல்லது இல்லாமலாகவோ வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளார்.

 

இந்த 40% மதிப்பீடு என்பது அனைத்து வேலைகளும் உடனடியாக முழுமையாக இழக்கப்படும் என்பதை குறிக்காது; மாறாக, வேலைகளின் தன்மை மாற்றியமைக்கப்படுவதையும் உள்ளடக்கியது.

 

குறிப்பாக ஊடகம், செய்தித் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணியாற்றுவோரின் தொழில்சார் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இம்மாற்றங்கள் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்னெடுத்த ஆய்வுகளின்படி, வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகளும்,

 

வளரும் நாடுகளில் குறிப்பிட்ட சதவீத வேலைகளும் AI தாக்கத்திற்கு உள்ளாகக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

இதனால் தொழில் சந்தை மாற்றங்களை அரசாங்கங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டை மறுசீரமைக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin