பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்

பிரதமர் மோடியை வரவேற்றார் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்: சென்னையில் ரூ.13,000 கோடி திட்டங்கள் தொடக்கம்!

அரசு உத்தியோகபூர்வ விஜயமாக்க சென்னை வருகை தந்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, பிரதமர் மோடி சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொள்வதுடன், ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகளிலும் ஈடுபடவுள்ளார்.

மேலும், சென்னை ஐஐடியின் மூளை ஆராய்ச்சி மையத்தை (Brain Centre) பார்வையிடும் அவர், தமிழகத்தில் ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார்.

தொடர்ந்து, சென்னையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா பள்ளியின் பொன் விழா கொண்டாட்டங்களிலும் பிரதமர் பங்கேற்கவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: admin