2036ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் டொலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு: முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்பு!
2036ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1.5 டிரில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தெரிவித்துள்ளார்.
ஊழலற்ற மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்தை வழங்குவதே தமது அரசின் நோக்கம் என்றார்.
சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர மோடி ரூ.13,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பேசிய முதல்வர் விஜய், சென்னை மெட்ரோ 3ஆம் கட்ட அனுமதி, கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ திட்டங்கள், கோதாவரி – காவிரி நதிகள் இணைப்பு மற்றும் அதிவேகப் போக்குவரத்துப் பாதைகள் போன்ற முக்கிய கோரிக்கைகளைப் பிரதமரிடம் முன்வைத்தார்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவு வழங்கும் எனப் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.


