20 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு தயாராகும் கத்தார்!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில், 2030ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ள கத்தார், ஆசிய ஒலிம்பிக் பேரவையின் (OCA) கொடியை அதிகாரப்பூர்வமாகப் பெற்றுக் கொண்டது.
ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி ஆரம்பமான 20ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், 45 தேசிய ஒலிம்பிக் குழுக்களின் பங்கேற்புடன் நடைபெற்றன. இப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடையவுள்ள நிலையில், நிறைவு விழாவில் OCA கொடி அடுத்த போட்டிகளின் ஏற்பாட்டாளரான தோஹாவிடம் கையளிக்கப்பட்டது.
இதன் மூலம் 2030ஆம் ஆண்டு 21ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான கத்தாரின் அதிகாரப்பூர்வ ஏற்பாடுகள் ஆரம்பமாகின்றன.
கடந்த 2006ஆம் ஆண்டு முதன்முறையாக ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்திய தோஹா, 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இம்மாபெரும் பல்துறை விளையாட்டு விழாவை நடத்தவுள்ளது.

