சுரேஷ் சாலே வழக்கு: மருத்துவ அறிக்கை வழங்கிய 10 வைத்தியர்கள் இன்று நீதிமன்றில்

சுரேஷ் சாலே வழக்கு: மருத்துவ அறிக்கை வழங்கிய 10 வைத்தியர்கள் இன்று நீதிமன்றில்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சாலேவை தேசிய வைத்தியசாலையிலிருந்து விடுவிக்க முடியாது எனக் குறிப்பிடும் மருத்துவ அறிக்கைகளை வழங்கிய 10 வைத்தியர்கள் மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் இன்று (06) பிற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர்.

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள சுரேஷ் சாலே தற்போது தேசிய வைத்தியசாலையின் சாதாரண வார்டொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கடந்த மாதம் 28ஆம் திகதியளவில் அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்க முடியும் என வைத்தியசாலை பணிப்பாளர் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும், அவர் இதுவரை விடுவிக்கப்படவில்லை என CID நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சாலேவை விடுவிக்க முடியாது எனக் குறிப்பிடும் வகையில் ஊட்டச்சத்து நிபுணர்கள், உளவியல் வைத்தியர்கள் உள்ளிட்ட 10 வைத்தியர்களைக் கொண்ட மருத்துவக் குழுவொன்று அறிக்கை வழங்கியுள்ளதாகவும் CID தெரிவித்துள்ளது.

 

இதனையடுத்து, குறித்த மருத்துவ அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்க கோட்டை நீதவான் பசன் அமரசேன அவர்களால் வைத்தியர்கள் மற்றும் வைத்தியசாலை பணிப்பாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin