தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 4 வான்கதவுகளும் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளன.
நீர்த்தேக்கத்திற்கு கிடைக்கும் நீரின் அளவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, விநாடிக்கு 2,800 கன அடி நீர் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றது.
இதன் காரணமாக, தெதுரு ஓயாவின் கீழ்ப்பகுதிகளிலும், ஆற்றின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறும், தெதுரு ஓயாவின் நீர்மட்ட உயர்வு தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

