நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவை ஒக்டோபர் 13ஆம் திகதி FCID-இல் ஆஜராகுமாறு அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.
மருத்துவ சிகிச்சைக்காகக் கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி சிங்கப்பூர் சென்றிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ, மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏயர்லைன்ஸ் விமானம் மூலம் நேற்று (05) இரவு நாட்டை வந்தடைந்தார்.
அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர்களுக்கான ‘கோல்ட் ரூட்’ (Gold Route) வசதியைப் பயன்படுத்தி வெளியேறியுள்ளார்.
இதேவேளை, FCID மேற்கொள்ளும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் அளிக்குமாறு அவருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் வகையில் முன்பிணை (Anticipatory Bail) வழங்குமாறு கோரி ஷிரந்தி ராஜபக்ஷ நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

