மஞ்சள் சிலிண்டர்களை நீல நிறமாக மாற்றி லிட்ரோ சிலிண்டர்களாக விற்பனை செய்ய முயற்சி; மூவர் கைது

மஞ்சள் சிலிண்டர்களை நீல நிறமாக மாற்றி லிட்ரோ சிலிண்டர்களாக விற்பனை செய்ய முயற்சி; மூவர் கைது

மஞ்சள் நிற எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல நிறம் பூசி, அவற்றை லிட்ரோ (Litro) எரிவாயு சிலிண்டர்களாக மாற்றும் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூவர், எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களில் தந்தை மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொட்டதெனியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

விசாரணைகளின்படி, புதிதாக நிறம் பூசப்பட்ட சிலிண்டர்கள் பழைய, ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட சிலிண்டர்களைப் போன்று தோற்றமளிக்க உணவுக் கழிவுகள், பான்கேக் மாவின் எச்சங்கள் மற்றும் மிளகாய் குழம்பு உள்ளிட்டவற்றை சிலிண்டர்களில் பூசியுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டதெனியாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin